இந்திய கிரிக்கெட் அணிக்கு நாளை பாராட்டு விழா

மும்பை,

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 20 ஓவர் உலக கோபையை கைப்பற்றியது. இதன் மூலம் 3-வது முறையாக 20 ஓவர் கோப்பையை வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை படைத்தது.

இந்தநிலையில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு நாளை பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வருடாந்திர விருது வழங்கும் விழா நாளை நடக்கிறது. இந்த விழாவின் போது 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் பாராட்டப்படுகிறார்கள்.

இதேபோல உலககோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணி., 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பையை வென்ற இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளும் பாராட்டுப்படுகிறார்கள்.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில், வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆகியோர் கிரிக்கெட் விருதுகளை பெறுகிறார்கள். முன்னாள் வீரர்கள் ரோஜர் பின்னி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது.

Source link