இந்த மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கபோகும் மழை .. – அப்போ சென்னை? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்! – chennai meteorological centre reports that there is a possibility of rain in a few parts of tamil nadu today

தமிழகத்தில் இன்று ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai rain
தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் 2ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை காணப்பட்டு வந்த நிலையில், ஒரு சில இடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சென்னை வானிலை ஆய்வு மையம்
 சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் மின்னலும் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தென் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு அலெர்ட்
தென் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு அலெர்ட்

அதே நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.மேலும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மழை தொடரு கூடும். ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதிகளில் குறிப்பிட்ட சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் வானிலை மாறுபடும்
 சில இடங்களில் வானிலை மாறுபடும்

இதனால் அந்த மாவட்டங்களில் சில இடங்களில் வானிலை மாறுபடும் மற்றும் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சென்னையில் நாளை வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை சிறிது குறையும்
 வெப்பநிலை சிறிது குறையும்

அதிகபட்ச வெப்பநிலை சுமார் 35 டிகிரி செல்சியஸ் வரி இருக்கக்கூடும் இரவு நேரங்களில் வெப்பநிலை சிறிது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், இந் த அறிவிப்பில் மீனவர்களுக்கு எந் தவித எச்சரிக்கையும் வெளிடப்படவில்லை மக்கள் தேவையான முன் அறிவிப்புகளை கருத்தில் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் வலியுறுத்திள்ளது.