இந்த வார விசேஷங்கள்: 17-2-2026 முதல் 23-2-2026 வரை

இந்த வார விசேஷங்கள்

17-ந் தேதி (செவ்வாய்)

* அமாவாசை.

* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் லட்ச தீபம்.

* ஸ்ரீசைலம், திருவைகாவூர், திருக்கோகர்ணம், காளஹஸ்தி தலங்களில் சிவபெருமானுக்கு திருக்கல்யாணம்

* ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் இந்திர விமானத்தில் பவனி, இரவு தங்க விருட்சப சேவை.

* நத்தம் மாரியம்மன் கோவில் காப்பு கட்டும் விழா.

* மேல்நோக்கு நாள்.

18-ந் தேதி (புதன்)

* சாம்பல் புதன்.

* திருவைகாவூர், திருக்கோகர்ணம், வேதாரண்யம் தலங்களில் சிவபெருமான் பவனி.

* நத்தம் மாரியம்மன் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

19-ந் தேதி (வியாழன்)

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு.

* நத்தம் மாரியம்மன் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

20-ந் தேதி (வெள்ளி)

* முகூர்த்த நாள்.

* மதுரை கூடலழகர் விழா தொடக்கம்.

* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

* மேல்நோக்கு நாள்.

Also Read
பிரம்மோற்சவ விழா.. கபிலேஸ்வரர் கோவிலில் போகி தேரோட்டம், புருஷா மிருக வாகன வீதிஉலா
சுவாமிமலை முருகப்பெருமான்

21-ந் தேதி (சனி)

* சதுர்த்தி விரதம்.

* பெருவயல், திருச்செந்தூர், பாவூர்சத்திரம், வென்னிமலை தலங்களில் மாசி உற்சவம் ஆரம்பம்.

* தேரெழுந்தூர் திருஞானசம்பந்தர் புறப்பாடு

* மிலட்டூர் விநாயகப் பெருமான் பவனி.

* சமநோக்கு நாள்.

22-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* சஷ்டி விரதம்.

* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.

* மதுரை கூடலழகர் ஆண்டாள் திருக்கோலம், இரவு அனுமன் வாகனத்தில் ராமாவதாரக் காட்சி.

* காங்கேயம் முருகன் மயில் வாகனத்தில் பவனி.

* சமநோக்கு நாள்.

Also Read
மே மாதம் திருப்பதி போறீங்களா..? தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு விவரம்
சுவாமிமலை முருகப்பெருமான்

23-ந் தேதி (திங்கள்)

* மதுரை கூடலழகர் கள்ளர் திருக்கோலம், இரவு கருட வாகனத்தில் பவனி.

* திருப்போரூர் முருகன் பிரணவ உபதேசம் அருளிய காட்சி.

* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விழா தொடக்கம்.

* திருவொற்றியூர், திருவெண்காடு, விருத்தாசலம் தலங்களில் சிவபெருமான் திருவீதி உலா.

* கீழ்நோக்கு நாள்.

Also Read
கோலாகலமாக நடைபெற்ற மகா சிவராத்திரி விழா.. சிவன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
சுவாமிமலை முருகப்பெருமான்

Source link