இந்த அறி விப்பைத் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) உற்சாகமாக வரவேற்றுள்ளது. அரசாணை வெளியீடு இது தொடர்பாகச் சங்கத்தின் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய தணிக்கை வாரியத்திடம் சங்கம் முன்வைத்த கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது.
2026 மார்ச் 15 முதல் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களும் மாற்றுத் திற னாளிகள் அணுகத்தக்க வகையில் (Accessible) இருக்க வேண்டும் என்ற கட்டாய உத்தரவு, 2016-ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் ஒரு ‘தடைகளற்ற இந்தி யாவை’ உருவாக்கும் முயற்சியின் முக்கியப் பகுதியாகும்” என்று தெரிவித்துள்ளனர். மேற்கத்திய நாடுகளுக்கு இணையான வசதி தேவை இந்த அறிவிப்புக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
அடுத்தகட்டமாக மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல், பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் ஆடியோ விவரிப்பையும் சப்- டைட்டிலையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் தொழில்நுட்ப வசதியை இந்தியாவிலும் உருவாக்க வேண்டும் என்று சங்கம் வலி யுறுத்தியுள்ளது. பொழுதுபோக்கு என்பது அனை வருக்கும் பொதுவானது என்பதை உறுதிப் படுத்திய இந்த அறிவிப்பு, மாற்றுத்திறனாளி களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

