இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை,

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

இதற்காக மத்திய மந்திரியும், பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் சென்னைக்கு வந்தார். அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து முடிவில் தொகுதி பங்கீட்டுகள் இறுதி செய்யப்பட்டன.

அதன்படி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுக 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கூட்டணி கட்சிகளுக்கு இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் சட்டசபை தேர்தல் பணிகள், தேர்தல் வியூகம், கள நிலவரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், கூட்டணி கட்சிளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கினால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கலந்து பேசி முடிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source link