இன்று இரவு 9 மணிக்கு தமிழில் ’துரந்தர் – தி ரிவெஞ்ச்’

சென்னை,

இன்று மாலை மற்றும் இரவு திரையிடப்பட இருந்த ‘துரந்தர் – தி ரிவெஞ்ச்’ தமிழ் டப்பிங் படத்தின் சிறப்புக் காட்சிகளை ரத்து செய்வதாக முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகள் ஒவ்வொன்றாக அறிவித்து வந்தநிலையில், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு காட்சி இன்று இரவு 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இந்தி காட்சிகள் மாலை 5 மணிக்கு வெளியான நிலையில் தமிழ், தெலுங்கு இன்று இரவும் மலையாளம் மற்றும் கன்னட காட்சிகள் நாளை காலை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read
இருந்தா சொல்லுங்க… நெல்சன் படத்தில் கேமியோ ரோல் கேட்கும் நடிகர் லெஜண்ட் சரவணன்
இன்று இரவு 9 மணிக்கு தமிழில் ’துரந்தர் - தி ரிவெஞ்ச்’

ரன்வீர் சிங் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் நாளை (19ந் தேதி) வெளியாகவுள்ளது. ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக இது உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் ஆதித்யா தார் இயக்கியுள்ளார்.

Source link