இன்று சிவாலய ஓட்டம்: குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கும் நிலையில் மாவட்டத்திற்குள் 2 நாட்கள் கனிமவள கனரக லாரிகள் நுழைய தடை விதிக்கப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் சிவராத்திரியை முன்னிட்டு 12 சிவாலயங்களையும் ஓடி சென்று தரிசனம் செய்யும் சிவாலய ஓட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. இதையொட்டி பக்தர்களின் பாதுகாப்புக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக் தர்களுக்கு தேவையான விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் துறையினர் செய்துள்ளனர்.

குறிப்பாக சிவால ஓட்டம் நடைபெறும் பாதையில் ஒவ்வொரு 2 கி.மீ. தூரத்திற்கும் இருசக்கர வாகன ரோந்து என மொத்தம் 44 இரு சக்கர வாகனத்தில் 88 போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதவிர போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் வாகன நிறுத்த வசதிகளுக்காக தனி போலீசார் பணியமர்த்தப்படுவார்கள்.

முக்கியமான இடங்களில் பக்தர்களுக்கு உதவ ‘மே ஐ ஹெல்ப் யூ’ மையம் நிறுவப்படும். பக்தர்களின் பாதுகாப்பிற்கு அவர்களின் பைகளில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் ஓட்டப்படும். பக்தர்களுக்கு வழிகாட்ட 12 இடங்களில் திசை மற்றும் தூரம் காட்டும் வரைபடங்கள் வைக்கப்பட்டுள்ளது. பெண் பக்தர்களுக்கு உதவ பெண் போலீசார் நியமிக்கப்படுவார்கள். சிவாலய ஓட்டம் நடைபெறுவதையொட்டி இன்றும், நாளையும் கனிமவள டாரஸ் மற்றும் கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source link