கிழமை: ஞாயிறு
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: பங்குனி
நாள்: 1
ஆங்கில தேதி: 15
மாதம்: மார்ச்
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று அதிகாலை 03-59 வரை உத்திராடம் பின்பு திருவோணம்
திதி: இன்று காலை 08-23 வரை ஏகாதசி பின்பு துவாதசி
யோகம்: அமிர்த, மரண யோகம்
நல்ல நேரம்: காலை 06-00 to 7-00
நல்ல நேரம்: மாலை 3-30 to 4-30
ராகு காலம்: மாலை 4-30 to 6-00
எமகண்டம்: காலை 12-00 to 1-30
குளிகை: காலை 3-00 to 4-30
கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30
கௌரி நல்ல நேரம்: மாலை 1-30 to 2-30
சூலம்: மேற்கு
புனர்பூசம்
மேஷம்
நீண்ட நாட்களாக நினைத்த திட்டங்கள் நடைமுறைக்கு வரும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் முதலீடு செய்யும் முன் சிந்திக்க வேண்டும் யோகாவில் மனம் லயிக்கும். புதிய தொழில் துவங்குவீர்கள். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர். மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். சொத்து வாங்கும் எண்ணம் தோன்றும். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். தொழிலில் புதிய தொடர்புகள் உருவாகும். பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நன்மையைத் தரும்.
மிதுனம்
இளம் பெண்கள் சற்று விட்டுக் கொடுத்து போவது நல்லது. தாயார் உடல்நலம் காரணமாக அலைச்சல், மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். சுமாரான வேலையில் இருப்பவர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் அமருவார்கள். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள்.
கடகம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
சிம்மம்
வியாபாரம் சீராக இருக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். பெற்றோரின் கனவு பலிக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பழைய கடன்கள் அடைபடும். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். தங்கள் குறிக்கோள் நிறைவேறும்
கன்னி
உத்யோகஸ்தர்கள் இன்று ஓய்வெடுத்து விட்டு குடும்பத்துடன் வெளியே சென்று வருவர். நீண்ட நாட்களாக இருந்த கழுத்து வலி நீங்கும்.தேகம் பொலிவுறும். குடும்பத்தின் பெரியவர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களிடம் அன்பு பாராட்டுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் நன்கு படிப்பர்.
துலாம்
வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தை கையாளுவீர்கள். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். பயணங்களின் போது கவனம் தேவை. வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடல் நலம் சுகம்பெறும். பங்குச் சந்தை லாபம் தரும். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள். மாணவர்கள் முன்னேறுவர்.
விருச்சிகம்
நண்பர்களிடையே கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கமிஷன் துறையை சார்ந்தவர்கள் அதிக லாபம் பெறுவர். தேகத்தில் உற்சாகம் வெளிப்படும். உறவினர்கள் வருகை இல்லத்தில் மகிழ்ச்சியைத் தரும். அரசியலில் நாட்டம் ஏற்படும். எதிரிகள் தங்கள் தவறை உணர்வர். தம்பதிகள் வெளியிடங்களுக்குச் செல்வர்.
தனுசு
இன்று இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். உறவினர்களால் நன்மை உண்டு. நடை பாதை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவர்.
அரசியலில் நாட்டம் கூடும். அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் தரும் நண்பர்கள் கைக் கொடுப்பர். முகம் புதுப்பொலிவு கூடும்.
மகரம்
பண வரவு தாமதப்படும். வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் சொந்த இடத்திற்கு சென்று வருவர். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர். பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். உடல் ஆரோக்கியம் சீர்படும்.
கும்பம்
வியாபாரம் சுமாராக இருக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை கூடி வரும். தங்களின் பொதுப்பணி மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள்.
மீனம்
இளைஞர்கள் தங்கள் வீட்டு வேலைகளை முடித்துவிடுவர். கலைஞர்களுக்கு பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். வர வேண்டிய பணம் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும்.
