இன்றைய ராசிபலன் (23.03.2026).. பணம், நகை வந்து சேரும்!

மார்ச் 23

கிழமை; திங்கட் கிழமை

தமிழ் வருடம்; விசுவாவசு

தமிழ் மாதம்; பங்குனி

நாள்; 9

ஆங்கில தேதி; 23

மாதம்; மார்ச்

வருடம்;2026

நட்சத்திரம்; இன்று அதிகாலை 01-26 வரை பரணி, இரவு 11-49 வரை கிருத்திகை பின்பு ரோகினி

திதி;இன்று அதிகாலை 12-15 வரை சதுர்த்தி, இரவு 09-54 பின்பு சஷ்டி

யோகம்;மரண, அமிர்த யோகம்

நல்ல நேரம்; காலை 6-30 to 7-30

நல்ல நேரம்; மாலை 4-30 to 5-30

ராகு காலம் ;மாலை 7-30 to 9-00

எமகண்டம்; காலை 10-30 to 12-00

குளிகை; காலை 1-30 to 3-00

கௌரி நல்ல நேரம்; காலை 01-30 to 02-30

கௌரி நல்ல நேரம்; மாலை 7-30 to 8-30

சூலம் ; கிழக்கு

சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி

மேஷம்

இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். தொழிலதிபர்களிடமிருந்து வேலையாட்கள் தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். சேமிப்பில் கவனம் தேவை. இரும்புத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தாமதித்த பணம் கைக்கு வரும். வழக்கில் திருப்பம் நிகழும்.

ரிசபம்

அண்டை வீட்டார்கள் உதவுவர். பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பத் தலைவிகளின் நிலை உயரும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். பெண்கள் எண்ணம் ஈடேறும். மாணவர்கள் திறன் கூடும். உடல் வலி நீங்கும்.

மிதுனம்

தொழில்முனைவோருக்கு தேவைப்பட்ட பணம் வங்கியில் கிடைக்கும். பிள்ளைகளால் நன்மைகள் உண்டு. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. விரும்பியப் பொருட்களை வாங்குவீர்கள். வெளிநாட்டு பயணம் சிறப்பாகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவர்.

கடகம்

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவர். எதிர்பாராத நன்மைகள் கிட்டும். பிள்ளைகளால் பெருமை சேரும். காதல் கசக்கும். பத்திரிகையாளர்கள் பயன் பெறுவர். எடுத்த காரியம் வெற்றியடையும்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

சிம்மம்

திருமணமாகாதவர்களுக்கு திருமணப் பேச்சுவார்த்தைகள் பலன் தரும். கணவன் மனைவியிடையே அன்பு பெருகும். விளையாட்டுத் துறையினர் முன்னேறுவர். தன்னம்பிக்கை மிளிரும். மூத்த அதிகாரிகள் பாராட்டுவர். பெரியவர்களிடம் பணிவு தேவை. கணவரிடம் அனுசரிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

கன்னி

பணம் பாக்கெட்டை நிரப்பும். செல்வாக்கு பெருகும். வீட்டை புதுப்பிப்பீர்கள். வேலையில் தங்கள் கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். தம்பதிகளிடையே அன்யோன்யம் மிகும். மாணவர்கள் நன்கு படிப்பர். தேகம் பொலிவு பெறும்.

துலாம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

விருச்சிகம்

பல காரியங்கள் நிறைவேறும். எதிரிகள் சரணடைவர். காதல் பலிக்கும். புதிய தம்பதிகளுக்கு பிள்ளையோகம் நிகழும். வியாபாரிகள் வெளியூர் பயணம் மேற்கொண்டு லாபத்தை அள்ளுவர். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காண்பிப்பர். உத்யோகத்தில் மதிப்பு கூடும்.

தனுசு

பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். தம்பதிகளின் அன்யோன்யம் கூடும். உடல் நிலையை கவனித்துக் கொள்வது நல்லது. இரவில் நீண்ட நேரம் கண்விழிக்க வேண்டாம். பூர்வீக சொத்தில் உங்களுக்குரிய பங்கு வந்து சேரும்.மாணவர்களின் நினைவாற்றல் கூடும். உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் கிரே

மகரம்

பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பணப்பொறுப்புக்களை கையாள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டினை விற்ற பணத்தை கொண்டு புதிய சொத்தினை வாங்குவீர்கள். மகன் சம்பந்தமாக இனிக்கும் செய்தி கிடைக்கும்.

கும்பம்

இளைஞர்கள் புதிய நிறுவனத்தில் வேலையில் அமர்வார்கள். உறவினர்கள் வந்து போவர். தேக்க நிலையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். வியாபாரம் சீராகவும், சாதகமாகவும் இருக்கும். மொத்தத்தில் வாழ்க்கையின் திருப்புமுனை அமையும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

மீனம்

பணவரவில் பிரச்சினை இல்லை. மனதில் பல்வேறு சிந்தனைகள் ஓடும். தியானம் பலனளிக்கும். வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். உங்கள் வங்கி கணக்கு உயரும். வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

Source link