கிழமை: புதன்கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: மாசி
நாள்: 13
ஆங்கில தேதி: 25
மாதம்: பிப்ரவரி
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று பிற்பகல் 02-08 வரை ரோகினி பின்பு மிருகசீரிஷம்
திதி: இன்று அதிகாலை 04-10 வரை அஷ்டமி பின்பு நவமி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 09-30 to 10-30
நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30
ராகு காலம்: மாலை 12-00 to 1-30
எமகண்டம்: காலை 7-30 to 9-00
குளிகை: காலை 10-30 to 12-00
கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30
கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்
மேஷம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தாமதமான வேலைகள் அனைத்தும் இன்று நகரக்கூடும். சக ஊழியர்கள் உதவுவர். உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். பண விஷயத்தில சிக்கனமாக இருங்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை உண்டாகும். மற்றவர்களுக்காக வீடு மனை அடமான விசயத்தில் கையொப்பமிட வேண்டாம்.
ரிஷபம்
நீண்ட தூர பயணம் தங்களுக்கு லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரிடம் கவனமாக இருப்பது நல்லது. அந்தரங்க விசயங்களை பகிர வேண்டாம். பண வரவு தாமதப்படும். செலவுகள் அதிகரிக்கும். சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் பயனடைவர்.
மிதுனம்
பத்திரிகையாளர்களுக்கு நிறுவனத்தாரிடம் இருந்து பாராட்டைப் பெறுவர். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள். இளைஞர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவர். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் பயன் உண்டு.
கடகம்
அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். வங்கிக்கு சென்று வருவது, தபால் நிலையம் சென்று வருவது போன்ற காரியங்கள் முடியும். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும். வசதி, வாய்ப்புகள் கூடும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும். தங்க ஆபரணங்கள் அதிகம் வாங்குவீர்கள்.
சிம்மம்
புதிய வாகனத்தை வாங்க பழைய வாகனத்தை விற்று விடுவீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். வியாபாரிகளின் விற்பனைப் பொருட்கள் நல்ல லாபத்தை காணும். வழக்கு சாதகமாகும். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விரும்பிய நபரை கைபிடிப்பீர்கள்.
கன்னி
உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் தாங்கள் நினைத்ததற்கும் மேலாக லாபம் ஏற்படும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் கொள்வர். பிரிந்திருந்த தம்பதிகளிடையே சமரசம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
துலாம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
விருச்சிகம்
அலுவலகத்தில் உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை குறைந்த வட்டிக்கு கடன் கிடைத்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த தங்களின் மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர்.
தனுசு
கமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல ஒரு தொகை கிடைக்கும். உங்கள் உறவினர் மற்றும் மனைவிவழி உறவினர்களைக் கூறி சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள்.யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். திருமண முயற்சி பலிக்கும்.
மகரம்
பிரியமானவர்களுக்காக பரிசு பொருட்களை வாங்குவீர்கள். அலட்சியம் செய்யாமல் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அப்பறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பதை தவிருங்கள். பெரியோர்களின் முன்னிலையில் சிலருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் ஆகும். உடலில் சளித் தொந்தரவு வந்து போகும்.
கும்பம்
ஒரு சிலருக்கு வீடு மாறும் எண்ணம் தோன்றும். காதலர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். தம்பதிகளிடையே புரிதல் உண்டாகும். சகோதரிவழியில் உதவி கிடைக்கும். உத்யோத்தில் உள்ளவர்களுக்கு வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வர். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
யாரிடமும் வரவு செலவு விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது இடம் அல்லது புது வீடு வாங்குவீர்கள். பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். அவர்கள் உதவுவர். தடைப்பட்டு வந்த சுபகாரியங்களை துரிதமாக முடித்துக் காட்டுவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பர்.
