தெலுங்கு சினிமாவில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் படங்களை இயக்கி வரும் இயக்குநர் வெங்கி அட்லூரி பல முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் இறுதியாக கடந்த 2024-ம் ஆண்டு வெளியான படம் ‘லக்கி பாஸ்கர்’. நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகை மீனாட்சி சௌத்ரி நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது பான் இந்திய அளவில் மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேறபைப் பெற்றது.
இயக்குநர் வெங்கி அட்லூரி, சூர்யாவின் 46வது படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. நாக வம்சி தயாரிக்கும் இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். இதில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாக உள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரி அடுத்ததாக பிரபல நடிகர் நானியின் நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வெங்கி அட்லூரி மற்றும் நானி கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் படப்பிடிப்பு இந்த 2026-ம் ஆண்டின் இறுதியில் தொடங்கும் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து. வெங்கி அட்லூரி நாக சைதன்யாவின் சகோதரர் அகில் அக்கினேனியை கதாநாயகனாக வைத்து ‘மிஸ்டர் மஞ்சு’ என்றப் படத்தை எடுத்திருக்கிறார்.
இந்நிலையில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படத்தை நடிகை ராதிகா பகிர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
