அதிமுக தலையிலான என்டிஏ கூட்டணி கட்சியின் தொகுதி பங்கீடு சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். இதனிடையில் தற்போது என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் இரட்டை சின்னத்துக்கு பதிலாக தாமரையில் போட்டியிட விரும்புவது அதிமுகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ்
இதனிடையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டுமென தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதோடு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் 12 தொகுதிகள் வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். கடந்த முறை அதிமுக கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெல்லாத நிலையில், அதிமுக மற்றும் பாஜகவுடன் தொடர்ந்து நல்லுறவை பேணி வந்தார்.
தாமரை சின்னத்தில் தமாகா
இதன் காரணமாக இந்த முறை அவருக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த தடவையை விட ஒரு இடம் குறைவாகவே தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு ஜி.கே. வாசன் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள ஐந்து தொகுதிகளிலும் தாமரைச் சின்னத்திலே போட்டியிட உள்ளார்கள். ராணிப்பேட்டை, ஈரோடு மேற்கு, கும்பகோணம், ஒட்டன்சத்திரம் மற்றும் கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ் கோரிக்கை
இந்நிலையில் ஜி.கே. வாசனிடம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமாறு அதிமுக பொதுச்செயலாளர் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை அவர் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே தொகுதியிலாவது இரட்டை இலையில் போட்டியிடுமாறு என கோரிக்கை வைத்தும், அதனை ஜி.கே. வாசன் தரப்பு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தாமரை சின்னத்திலே தமாகா போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளது.
தாமரை சின்னத்தில் சிறிய கட்சிகள்
அதே போல் என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன், கே.சி. திருமாறன் ஆகியோரும் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இப்படி சிறிய கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஆர்வம் காட்டாதது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனிடையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனுடன் தமாகா கட்சியின் 5 தொகுதிகளுடன் சேர்த்து 32 இடங்களில் தாமரை சின்னம் போட்டியிட உள்ளது.
அதோடு கே.சி. திருமாறன், ஜான் பாண்டியன் ஆகியோரும் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பாஜக சின்னத்தில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயக கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாரிவேந்தர் அறிவித்துள்ளனர். தொடர்ந்து எந்த சின்னத்தில் போட்டி என்பதை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் திட்டவட்டம்
இதனையடுத்து அவர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவாரா அல்லது இரட்டை இலையை தேர்ந்தெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையில் டிடிவி தினகரன் அமமுக குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவருக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
