இரண்டு தொகுதிகளுக்கு தனித்தனி வேட்பாளர்கள் – ராமதாஸ், சசிகலா வியூகம் என்ன? – two candidates in two constituencies what is ramadoss and sasikalas strategy

விருத்தாசலம்மற்றும் மயிலாடுதுறைக்கு தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றனர் ராமதாஸ் மற்றும் சசிகலா

Ramadoss and Sasikalas strategy(புகைப்படங்கள்Samayam Tamil)
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் -ன் அய்யா பாமக மற்றும் சசிகலா சார்ந்திருக்கக்கூடிய அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். பாமக இரண்டு துண்டுகளாக உடைந்தபினர் தனித்து விடப்பட்ட ராமதாஸ் தனிக்கூட்டணி ஒன்றை அமைத்துள்ளார்.

இரு தரப்பும் கூட்டணி தொகுதிகள் பங்கீடு தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.இந்நிலையில் விருத்தாசலம் தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும், அதிமுக கூட்டணி பாமக சார்பாக தமிழரசி ஆதிமூலமும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் விருத்தாசலம் தொகுதிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே சுரேஷ் வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில் சசிகலாவும் சுந்தரராஜன் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார்.

அதேபோன்று மயிலாடுதுறை தொகுதிக்கு சக்திவேல் என்பவரை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில் சசிகலாவும் அதே தொகுதிக்கு சுதாகர் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார்.

ராமதாஸ், சசிகலா வியூகம் என்ன

அரசியலில் தனித்துவிடப்பட்ட இருவருக்குமான எதிராளிகள் ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள் அந்த கூட்டணியை வீழ்த்துவதே ராமதாஸ் மற்றும் சசிகலாவின் வியூகம் என்கின்றனர் விமர்சகர்கள்.