இரும்பு கழிவுகளை திருட முயன்ற போது விபரீதம்: ரசாயன விஷவாயு தாக்கி 3 பேர் சாவு

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்டத்தில் முனித் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் 5 பேர் கொண்ட மர்மகும்பல் சிலர் இரும்பு கழிவுகளை திருடச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு முழுமையாக ரசாயன வாயு நிரம்பிய சிலிண்டரை கும்பல் வெட்டி திருட முயன்றுள்ளது. இதனால் வெளியான ரசாயன விஷவாயு தாக்கி 5 பேரும் மயங்கி விழுந்த தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 5 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link