இறுதிப்போட்டி எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்: சான்ட்னர்

ஆமதாபாத்,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கி யது. இந்தியா, இலங்கை இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 20 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் சூப்பர்8 சுற்று முடிவில் தென்ஆப் பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியை எட்டின. முத லாவது அரையிறுதியில் நியூசிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை பந்தாடி 2-வது தடவையா கவும், இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையா கவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர் ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் குஜராத் மாநிலம் ஆமதாபாத் தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மோதுகின்றன.

‘இறுதிப்போட்டி எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அனேகமாக கோப்பையை வெல்லக்கூடிய முதன்மையான அணியாக நாங்கள் இல்லை என் பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதனை பற்றி எங்களுக்கு கவலை யில்லை. எங்களது சிறிய விஷயங்களையும் சரியாக செய்து ஒரு அணியாக வலுவான செயல் திறனை வெளிப்படுத்தினால் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கோப்பையை தட்டித் தூக்குவதற்கு சில இதயங்களை உடைத்தாலும் கவலையில்லை. ஆமதாபாத்தில் மிகப்பெரிய இந்திய ரசி கர்கள் பட்டாளத்துக்கு முன்பு விளையாடுவது எளிதான விஷயம் அல்ல. ஆனால் உள்ளூர் ரசிகர்களை அமைதிப்படுத்துவதே எங்கள் இலக்கு. எங்களது பாணி யில் கச்சிதமாக விளையாடினால் இன்னொரு பெரிய அணிக்கு அதிர்ச்சி கொடுக்க முடியும். சொல்லப்போனால் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்ல வேண்டிய அழுத்தம் இந்தியாவுக்கு தான் அதிகம் உள்ளது’ என்றார்.

Source link