இறைவன் அனைத்து நலன்களையும் வழங்கிட பிரார்த்திக்கிறேன் – எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து

சென்னை,

இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

Also Read
தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம்
கோப்புப்படம்

திருக்குர்ஆன் புனித நூல் அருளப்பட்ட மேன்மைமிகு ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து ரம்ஜான் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

Also Read
திமுக ஆட்சியில் கொடூர மிருகங்கள் சுதந்திரமாக நடமாட்டம்: பெண்களுக்கு பாதுகாப்பில்லை – அன்புமணி கண்டனம்
கோப்புப்படம்

மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனைத் தொழுது, ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இறைவன் அனைத்து நலன்களையும் வழங்கிட பிரார்த்திக்கிறேன்.

Also Read
தொடரும் சர்வர் பிரச்சினை: எப்போதும் மன்னிப்பு கேட்கும் பதிவுத்துறை இணையதளம்..!
கோப்புப்படம்

இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில், உளங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Source link