நியூ கெலானி பாலம் முதல் அதுரகிரியா வரையிலான உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தும் சில காரணங்களால் தொடர்ந்து தள்ளி போய் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் பின்னணி, கிடைக்கும் பலன்கள் உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
| வ.எண் | நெடுஞ்சாலை திட்டம் | தூரம் (கி.மீ) |
| 1 | நியூ கெலானி பாலம் (NKB) – போர்ட் சிட்டி | 5.3 |
| 2 | கஹதுடுவா – பெல்மாடுலா | 73.9 |
| 3 | நியூ கெலானி பாலம் (NKB) – அதுருகிரியா | 17.3 |
இலங்கை பொருளாதார நெருக்கடி – காரணமும், பின்னணியும்..
அதுருகிரியா பறக்கும் சாலை திட்டத்தின் பின்னணி
இவை மூன்றில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் பணிகள் முடங்கியுள்ளன. இதனால் கடந்த ஆண்டே பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த லிஸ்டில் உள்ள NKB – அதுருகிரியா பறக்கும் சாலை திட்டத்தின் பின்னணியை பற்றி பார்த்துவிடலாம்.
- 2015 – முதல்கட்டமாக சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளித்து, அதற்கான பணிகள் முடிக்கப்பட்டன.
- 2020-21 – 4 வழிச் சாலையாக உயர்மட்ட வழித்தடத்தில் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு 100 சதவீத வெளிநாட்டு முதலீடுகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. கிட்டதட்ட 55 சதவீத அளவிற்கு பணிகள் முடிக்கப்பட்டன.
- 2023 – சில காரணங்களால் திட்டம் முடங்கியது. எனவே முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஈடுபடுவதற்கு தயக்கம் காட்டினர்.
நியூ கெலானி பாலம் – அதுருகிரியா பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் இரண்டு விதமான சிக்கல்கள் நிலவுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
| சுற்றுச்சூழல் காரணிகள் | மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தலங்காமா சதுப்புநிலத்தின் வழியாக புதிய பறக்கும் நெடுஞ்சாலை திட்டம் வருகிறது. எனவே சுற்றுச்சூழல் ரீதியாக பெரிய அளவில் தாக்கம் ஏற்படும். அங்குள்ள உயிரினங்கள் மட்டுமின்றி அப்பகுதியின் இயற்கை சூழலே பாதிக்கப்படும். இதனால் ஏராளமான சூழலியல் அமைப்புகள், தன்னார்வலர்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். |
| பொருளாதார தடைகள் | NKM – அதுருகிரியா பறக்கும் சாலை திட்டத்திற்கான ஒப்பந்தமானது CHEC எனப்படும் சீன துறைமுக பொறியியல் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. அதாவது, கட்டி முடித்து செயல்படுத்தி அதன்பிறகு அரசின் வசம் ஒப்படைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. இதைத் தான் Build-Operate-Transfer, BOT மாடல் என்று அழைக்கின்றனர். இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த பறக்கும் சாலை திட்டத்தை கையிலெடுத்த சீன நிறுவனம் பின் வாங்கிக் கொண்டது |
NKM – அதுருகிரியா பறக்கும் சாலை திட்டத்தால் கிடைக்கும் நன்மைகள்:
- பார்லிமெண்ட் ரோடு, பேஸ்லைன் ரோடு, ராஜகிரியா வழித்தடம் ஆகிய பகுதிகளில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இது புதிய பறக்கும் சாலையால் குறையும்.
- கொழும்பு துறைமுகம் மற்றும் துறைமுக நகரம் ஆகியவற்றில் இருந்து அவுட்டர் சர்க்குளர் ஹைவே வரை தடையற்ற போக்குவரத்து சேவையை அளிக்கும்.
- கொழும்பு நோக்கி பயணிக்கும் புறநகர் பகுதி மக்களுக்கு நேரம் மற்றும் எரிபொருள் செலவு மிச்சமாகும்.
- கொழும்புவின் வர்த்தகப் பகுதிகளை கிழக்கு புறநகரில் மிக வேகமாக விரிவடைந்து வரும் பகுதிகள் உடன் இணைப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.
எனவே விரைவாக நியூ கெலானி பாலம் – அதுருகிரியா பறக்கும் சாலை திட்டப் பணிகளை மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
