இஸ்தான்புல் நகரில் பூனைகளுடன் செல்ஃபி எடுக்க வரிசை கட்டும் சுற்றுலாப் பயணிகள்

காணொளிக் குறிப்பு, உலகளவில் பிரபலமான இஸ்தான்புல் பூனைகள்

காணொளி: இஸ்தான்புல் நகரில் பூனைகளுடன் செல்ஃபி எடுக்க வரிசை கட்டும் சுற்றுலாப் பயணிகள்

24 நிமிடங்களுக்கு முன்னர்

இஸ்தான்புல்லில் சுற்றுலா பயணிகள் மசூதிகள் மற்றும் அரண்மனைகளை பார்ப்பதற்காக மட்டும் வரிசையில் நிற்பவில்லை.

பூனைகளுடன் செல்ஃபிக்களை எடுக்கவும் அவர்கள் வரிசையில் நிற்கின்றனர்.

சமூக ஊடகங்களில், இந்தப் பூனைகள் திடீரென பிரபலங்களாக மாறியுள்ளன. சுற்றுலாப் பயணிகள் அவற்றை உலகளாவிய நட்சத்திரங்களாகக் கருதுகின்றனர்.

ஆனால், பல நூற்றாண்டுகளாக பூனைகள் இஸ்தான்புல் நகரத்தின் வாழ்வியலில் ஓர் அங்கமாக இருந்துள்ளன.

ஒட்டோமான் பேரரசு ஆட்சிக் காலத்திலிருந்தே பூனைகள் அந்நகரத்தின் முக்கிய அங்கமாக உள்ளன.

பூச்சிகள் மற்றும் எலிகளை கட்டுப்படுத்தி அரண்மனையை சுத்தமாக வைட்டிருப்பதே அந்த காலகட்டத்தில் பூனைகளின் வேலையாக இருந்தது.

நகரத்தின் பூனைகளுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்கென்றே ஒரு முழுநேரப் பணியும் இருந்தது.

இன்று, அவை உள்ளூர் மக்களுக்கு அன்றாட மகிழ்ச்சியை அளிப்பது மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளை கவரக் கூடியவையாகவும் உள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link