குவிட்டோ,
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவேடாரில் உள்ள எஸ்மெரால்டஸ் நகரில், பசிபிக் கடற்கரை அருகே அந்நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையம் ஈகுவேடாரின் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோ ஈகுவேடாருக்கு சொந்தமானதாகும்.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு, அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து தீயணைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த 8 மாதங்களுக்குள் நடந்த 2-வது தீ விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
