ஈரனில் உள்ள மிகப்பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போர், கடந்த 28-ந்தேதி தொடங்கி 5-வது வாரமாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை மூலமாகவும் மறுபுறம் இஸ்ரேலுடன் சேர்த்து ராணுவ தாக்குதலையும் அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.   ஆயுதங்களை விட்டொழித்து முழுவதுமாக சரணாகதி அடைவது, யுரேனியம் செறிவூட்டலை கைவிடுவது உள்ளிட்ட அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக்கோள்ளாமல் தொடர்ந்து தாக்கு பிடித்து பதிலடி கொடுத்து வருகிறது

இதனால் அமெரிக்காவின் நட்பு நாடுகளான வளைகுடா நாடுகளுடன் இணைந்து இஸ்ரேலும் இந்த போருக்கான விலையை கொடுத்து வருகின்றன. மறுபுறம் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதன் எதிரொலியாக உலக நாடுகளையும் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் உச்சமாக போர் தொடங்கியது முதல் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 40 சதவீதம் வரை உயர்ந்தது.

இதனால் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு அதன் நட்பு நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் அமெரிக்க அதிப்ர் டிரம்ப் அந்த நாட்டு மக்களிடம் நேரடியாக பேசி முக்கியமான ஒரு தகவலை கூறப்போவதாக அறிவித்தார். 20 நிமிடங்கள் நீடித்த இந்த உரையில் அவர், “அமெரிக்காவின் முக்கிய இலக்குகள் நிறைவேறும் நிலையில் உள்ளன என்று இன்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இந்த போரில் உயிர்நீத்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்த நடவடிக்கையை முழுமையாக முடிப்போம். அது மிகவும் விரைவாக நிறைவேறும். நாம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம். அடுத்த 2 முதல் 3 வாரங்களில் எதிரிகளை மிகவும் கடுமையாக தாக்கப்போகிறோம். அவர்களை “கற்கால யுகத்திற்கே” திருப்பி அனுப்புவோம்” என்றார்.

டிரம்பின் இந்த அறிவிப்பால் வரும் நாட்களில் ஈரான் மீதான தாக்குதல் இன்னும் தீவிரம் அடையும் என்று சொல்லப்பட்ட நிலையில், நேற்று ஈரானில் உள்ள மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது. தெஹ்ரானில் இருந்து கராஜ் நகரை இணைக்கும் 136 மீட்டர் நீள பாலத்தின் ஒருபகுதி இதில் சேதம் அடைந்துள்ளது. பயங்கர புகை மூட்டமாகவும் பாலம் இடிந்து விழும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

Source link