ஈரானின் மிக முக்கிய தீவு நகரமான கார்க்கில் அமெரிக்கா சக்தி வாய்ந்த குண்டு வீச்சு

தெஹ்ரான்,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. சர்வதேச அளவில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனியின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்று இஸ்ரேல் அறிவித்துள்ளதால், கோபம் அடைந்த ஈரான் நேற்று முதல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. பதிலுக்கு அமெரிக்காவும் தனது பதிலடியை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஈரானின் மிக முக்கிய தீவு நகரமான கார்க் தீவில் அமெரிக்கா சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், ஈரானின் முக்கியமான இடமாக கருதப்படும் கார்க் தீவில் உள்ள அனைத்து ராணுவ இலக்குகளும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. அந்த தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை அழிக்காமல் இருக்க நான் தீர்மானித்துள்ளேன், ஆனால், ஈரான் அல்லது வேறு யாரேனும் ஹார்மூஸ் நீரிணை வழியாக கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தினால், இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்வேன்

உலகம் இதுவரை பார்த்திராத அளவுக்கு சக்திவாய்ந்ததும் நவீன தொழில்நுட்பத்துடனும் கூடிய ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன. நாம் தாக்க விரும்பும் எந்த இலக்கையும் பாதுகாக்கும் திறன் ஈரானிடம் இல்லை’ என்று டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் நாட்டின் 90 சதவீத எண்ணெய் உற்பத்தி கார்க் தீவில் இருந்துதான் நடைபெறும் நிலையில், அங்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Source link