ஈரானின் மின் நிலையம், ராணுவ தளங்கள் அருகே செல்ல வேண்டாம் – இந்திய மாலுமிகளுக்கு அலர்ட்

புதுடெல்லி,

ஈரானின் அணு ஆயுத திட்டங்களை எதிர்த்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டாக போரை தொடங்கின. இதில் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச பட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

இதனால் வெகுண்டெழுந்த ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான பதிலடியை கொடுத்தது. இஸ்ரேலை நேரடியாகவும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்கள் மீதும் சரமாரியாக தாக்குதலை அரங்கேற்றியது.

சுமார் 40 நாட்களாக நடந்த இந்த போரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் ஈரானிலும், அதற்கு ஆதரவாக போரிட்ட ஹிஸ்புல்லாக்களின் லெபனானிலும் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

முக்கியமாக, ஈரானின் பல்வேறு தலைவர்கள், ஏராளமான தளபதிகள் பலியாகி இருந்தனர். மேலும் அந்த நாட்டின் முக்கியமாக உள்கட்டமைப்புகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன.

அதேநேரம் வளைகுடா நாடுகளில் ஈரான் நடத்திய தாக்குதலால் அந்த நாடுகளும் பெருத்த சேதத்தை சந்தித்தன.

இதற்கிடையே ஹார்முஸ் நீரிணையையும் மூடிய ஈரான், அந்த வழியாக உலக நாடுகளுக்கு செல்லும் கச்சா எண்ணெய் வினியோகத்தையும் தடுத்தது. மீறி சென்ற கப்பல்கள் மீது தாக் குதல் நடத்தப்பட்டதால், அந்த வழியாக நடந்து வந்த உலகின் 20 சதவீத அளவிலான கச்சா எண்ணெய் வணிகம் தடைபட்டது.

அதேநேரம் வளைகுடா நாடுகளில் ஈரான் நடத்திய தாக்குதலால் அந்த நாடுகளும் பெருத்த சேதத்தை சந்தித்தன.

இதற்கிடையே ஹார்முஸ் நீரிணையையும் மூடிய ஈரான், அந்த வழியாக உலக நாடுகளுக்கு செல்லும் கச்சா எண்ணெய் வினியோகத்தையும் தடுத்தது. மீறி சென்ற கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அந்த வழியாக நடந்து வந்த உலகின் 20 சதவீத அளவிலான கச்சா எண்ணெய் வணிகம் தடைபட்டது.

இதனால் வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் இந்த போர் கடுமையாக பாதித்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கியாஸ் சிலிண்டருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. கச்சா எண்ணெய் கிடைக்காமல் பல நாடுகள் அவசர நிலையை அமல்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டன.

எனவே ஹார்முஸ் நீரிணையை 6-ந்தேதி இரவுக்குள் திறக்காவிட்டால், ஈரானில் மின்சார நிலையங்கள், பாலங்கள் போன்ற சிவில் உள்கட்டமைப்புகளை தகர்ப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.

பின்னர், இந்த கெடுவை நேற்று அதிகாலை வரை நீட்டித்த அவர், தவறினால் ஒட்டுமொத்த ஈரானையும் ஒரே இரவில் அழித்து விடுவோம் எனவும், ஈரானிய நாகரிகம் முழுவதும் அழிக்கப்படும் என்றும் பயங்கர மிரட்டலை விடுத்தார். டிரம்பின் இந்த அறிவிப்பு ஒட்டு மொத்த உலகையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்தநிலையில் திடீர் திருப்பமாக ஈரானுக்கு எதிரான போரை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் அறிவித்தன. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து பதற்மான சூழ்நிலை நீடித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஈரானின் மின் நிலையம், ராணுவ தளங்கள் அருகே செல்ல வேண்டாம். கப்பலில் உள்ள இந்திய மாலுமிகள் கப்பலிலேயே தங்குங்கள். ஈரானுக்குள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் என இந்திய கப்பல் போக்குவரத்து தெரிவித்துள்ளது.

Source link