ஈரானில் இருந்து தமிழகம் திரும்பிய மீனவர்கள் – குமரியில் சிறப்பான வரவேற்பு

கன்னியாகுமரி,

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு நடுவே, ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன்படி, முதற்கட்டமாக 340 மீனவர்கள் பத்திரமாக இன்று தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

குமரி மாவட்ட எல்லையான குமாரபுரத்திற்கு வந்து சேர்ந்த மீனவர்களுக்கு தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈரானில் உணவு மற்றும் தங்குமிடமின்றி தவித்த நிலையில், தங்களை மீட்க, நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.

Source link