ஈரானில் சிக்கியுள்ள 700-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் – வைகோ

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஈரானில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். ஈரான் உடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போர் காரணமாக சிக்கித் தவிக்கும் 700-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் மீன்பிடி விசைப்படகுகளில் கடந்த 3 வார காலமாக முடங்கியுள்ளனர்.

எந்த நேரத்தில் உயிர் போகுமோ என்று குண்டு வீச்சிக்கு இடையில், உணவு தண்ணீர் இல்லாமல் விசைப்படகுகளில் தங்கி உள்ளோம் என்று அச்சட்டத்துடன் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மத்திய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை மீட்பதற்கு சிறப்பு விமானங்கள் அல்லது கப்பல்கள் மூலம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link