ஈரான் போர்… பாகிஸ்தானின் உதவி பற்றி ஓய்வு பெற்ற அமெரிக்க கர்னல் கூறுவது என்ன?

புதுடெல்லி

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரில் பேச்சுவார்த்தை வழியே தீர்வு காண வேண்டும் என இந்தியா கூறி வருகிறது. சீனாவும், மத்திய கிழக்கில் அமைதி திரும்ப பேச்சுவார்த்தையே ஒரு தீர்வாக இருக்கும் என கூறி வருகிறது. இந்த நிலையில், இந்த பட்டியலில் பாகிஸ்தானும் சேர்ந்துள்ளது.

இதன்படி, அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் கூறும்போது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே விரிவான அளவில் தீர்வு ஏற்படும் வகையில், அர்த்தமுள்ள மற்றும் தீர்க்கம் வாய்ந்த பேச்சுவார்த்தையை எங்களுடைய நாட்டில் நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்காக நாங்கள் பெருமை கொள்கிறோம் என கூறினார்.

Also Read
பிரதமர் மோடி தலைமையில் அச்சமின்றி செயல்படுகிறோம் – வெளிநாடுகளின் மோதல்களை ஒப்பிட்டு யோகி ஆதித்யநாத் பேச்சு


ஈரான் போர்... பாகிஸ்தானின் உதவி பற்றி ஓய்வு பெற்ற அமெரிக்க கர்னல் கூறுவது என்ன?

இந்நிலையில், புவிஅரசியல் ஆபத்து சூழலுக்கான ஆலோசகர் மற்றும் ஓய்வு பெற்ற அமெரிக்க கர்னல் டக்ளர் மெக் கிரிகோர், ஈரான் போரை தடுக்கும் வகையில் பாகிஸ்தான் உதவி செய்ய முன்வந்துள்ளது பற்றி கூறும்போது, பாகிஸ்தான் உதவி செய்கிறேன் என கூறுவது, எரிந்து கொண்டிருக்கும் கட்டிடத்தில் இருக்கும் நபர் ஒருவர், நான் உங்களுக்கு தங்கி கொள்ள அறை ஒன்றை தருகிறேன் என்று கூறுவது போன்றதுதான். பாகிஸ்தான் பண்பட்ட நிலையிலான ஒரு நாடு கிடையாது. பண்பாடு வளாகத்தில் உள்ள ஒரு பகுதியாக அது உள்ளது என்றார்.

அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து, ஈரானை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 4 வாரங்களாக போர் நீடித்து வந்த நிலையில், 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் என டிரம்ப், சமீபத்தில் கூறினார். ஆனால் ஈரானோ, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கூறி வருகிறது.

Source link