ஈரான் மீது இன்று வலிமையான தாக்குதல்: டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு ஈரானில் உள்ள எண்ணெய் கிடங்குகள், கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், ஈரான் மீது இன்று வலிமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஈரான் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்றும் டிரம்ப் கூறிவருகிறார். அதேவேளை, சரணடையப்போவதில்லை என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link