ஈரான் ராணுவ கட்டிட விவரங்களை இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் 20 பேர் கைது

தெஹ்ரான்

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் 180-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது.

Also Read
வளைகுடா நாடுகளில் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து

ஈரான் ராணுவ கட்டிட விவரங்களை இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் 20 பேர் கைது

இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதற்கு பதிலடியாக ஈரானும், அமெரிக்காவையும், இஸ்ரேலையும் மற்றும் பிற நாடுகளில் அமைந்த அந்நாடுகளின் படை தளங்களை தாக்கி வருகிறது.

இந்த நிலையில், ஈரானின் வடமேற்கே, இஸ்ரேலுடன் ஒத்துழைப்பில் ஈடுபட முயற்சித்த 20 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என மேற்கு அஜர்பைஜன் மாகாணத்தில் உள்ள வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாக கொண்டு தஸ்னிம் செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கின்றது.

இதன்படி, ஈரான் நாட்டில் இருந்து கொண்டு, அந்நாட்டின் தகவல்களை இஸ்ரேலுக்கு உளவு பார்த்து வருகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேற்காசிய போரால் பதற்றம் நிறைந்த சூழலில், ஈரானின் ராணுவ கட்டிடங்கள் அமைந்த இடங்கள், பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி உள்ளனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 20 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Source link