வாஷிங்டன்,
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்துள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனீ கொல்லப்பட்டார். மேலும் ராணுவ தளபதிகள் உள்பட உயர் அதிகாரிகளும் உயிரிழந்தனர்.இதையடுத்து அமெரிக்கா – இஸ்ரேலை பழித்தீர்ப்போம் என்று சூளுரைத்துள்ள ஈரான் பதிலடியில் ஈடுபட்டு வருகிறது.இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள 27 அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
பக்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. இதில் குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள், சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. குவைத்தில் 3 அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. ஈரானின் தாக்குதலில் 6 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதற்கிடையே ஈரான் மீது தொடர்ந்து அமெரிக்கா – இஸ்ரேல் படைகள் குண்டுகள் வீசி வருகின்றன. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் 5-வது நாளில் நுழைந்துள்ள நிலையில், இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதில் ஈரானின் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா கடும் தாக்குதல் நடத்தியது. ஈரான் புரட்சிகர காவல் படையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வசதிகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணை – டிரோன் ஏவுதளங்கள், விமான தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு அவை அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.ஈரான் ஆட்சியால் ஏற்படும் உடனடி அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து தீர்மானமான நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, அமெரிக்கா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.அதேபோல் ஈரான் மீது இஸ்ரேலும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் தெஹ்ரான் மீது குண்டுகள் வீசப்பட்டன. போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கில் 14 நாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, ஈரான் மீதான தாக்குதல் விவகாரத்தில், டிரம்புக்கு கமலா ஹாரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை கூட்டி முடிவெடுக்காமல், டிரம்ப் தனது சொந்த விருப்பத்தின் பேரில் ஈரானை தாக்கியுள்ளதாக கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார். அனைத்து போர்களையும் நிறுத்துவேன் என தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்தவர், புதிய போரை தொடங்கியுள்ளதாக கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.