சென்னை,
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணியை வழிநடத்தும் டேவிட் வார்னர், செய்தியாளர் சந்திப்பின்போது சக கேப்டன்களை மீது கோபமடைந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
8 அணிகள் இடையிலான 11-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. அதற்கு முன்னதாக கேப்டன்ஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது. அனைத்து அணிகளின் கேப்டன்களும் ஒன்று கூடி செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது வார்னர் ஒரு கேள்விக்கு பதிலளித்து கொண்டிருக்கும்போது அருகில் இருந்த, ஷாஹீன் அப்ரிடி, மொஹம்மது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகீல் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். இதனால் கவனம் சிதறிய வார்னர், திடீரென தனது பேச்சை நிறுத்தி, “உங்களுக்கென்ன ஆச்சு?, இங்கே சில ‘ஸ்கூல் கிட்ஸ்’ உட்கார்ந்திருக்கிறார்கள்,” என்று கூறினார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
