சென்னை,
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி மாவட்டத் தலைநகரங்களில் தவெக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ”எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பியவர். எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தவர். ஆனால் அதே திமுக குடும்பம் ரஜினிகாந்திற்க்கு பல மிரட்டல்களை கொடுத்து அரசியலுக்கு வர விடாமல் பார்த்து கொண்டனர். இன்று என்ன ஆனது.. கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்க போய்விட்டார்” என்று கூறினார்.
இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு பதிலடி கொடுத்து வேலூர் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
ரஜினிகாந்த் அவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே… கொரோனா வைரஸ் தீவிரமாய் பரவிய நிலையில், அச்சமயம் கூட்டம் சேர்ப்பதினால் மக்களுக்கு ஏற்படும் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டும். கொரோனா தொற்றால் ஏற்படும் உயிர் இழப்புக்களை தவிர்க்கவும் அரசியலில் இருந்து அவர் விலகினார். மற்றவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சி அல்ல; தனது பலத்தை நிருபிக்க தன்னை நம்பி வரும் உயிர்களை பலியிடும் அற்ப அரசியலை அவர் செய்யவில்லை.
கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது. தனது அரசியல் விலகல் எத்தனை விமர்சனங்களையும், பழிகளையும் உருவாக்கும் என்பதை அறிந்தும் அதனை தாங்கி கொண்டு மக்களின் நலனிற்கு முக்கியத்துவம் அளித்தார். அது தான் அவரின் மனவலிமை. அதனால் நான் அவர் நிரந்தர தலைவர்… #பிழைக்கவும் ரஜினி_பழிக்கவும்_ரஜினி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

#பிழைக்கவும்_ரஜினி_#பழிக்கவும்_ரஜினி pic.twitter.com/f5Hu1ztdcC
— Sholinghur N Ravi (@SholinghurRavi) March 12, 2026