உலகின் செல்வாக்கு மிக்க மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உலக அளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியல்
அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட் நிறுவனம் உலகில் மிகவும் பிரபலமான தலைவர் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பானது கடந்த மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடைபெற்றது. அந்த வகையில் உலக அளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டது அதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 68% பேர் ஆதரவுடன் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம்
பிரதமர் மோடியின் ஆட்சி திட்டம் சர்வதேச அளவிலான செயல்பாடுகளால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இந்த நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது 75% பிரதமர் மோடிக்கு ஆதரவு அளித்திருந்தனர். மேலும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு 25% மக்கள் ஒப்புதல் அளிக்காமல் இருந்தனர் மேலும் 6% மக்கள் தங்களது கருத்தை தெரிவிக்கவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வது இடத்தில் தென்கொரியா அதிபர்
அமெரிக்க நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின் பிரதமர் மோடியை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஸ்விட்சர்லாந்தில் தலைவர் பார் மெலின் உள்ளார். இவர் 62% மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் 20% பேர் கருத்துக்களை வாக்களிக்க தவறிவிட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3வது இடத்தில் தென்கொரியா அதிபர் லிஜே மியுங் உள்ளார். இவருக்கு 62% மக்கள் ஒப்புதல் மற்றும் மதிப்பீடுகளை வழங்கி இருந்தாலும் 30% மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க மறுத்துவிட்டன.
அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே
4வது இடத்தில் அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே உள்ளார். இதனைத் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியும் இடம் பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷுன் பாம் உள்ளார் தொடர்ந்து உலகின் செல்வாக்கு மிக்க பிரபலமான தலைவர்கள் பட்டியலில் 8வது இடத்தில், பெல்ஜியத்தின் பிரதமர் பார்ட்டி டி வெவர் உள்ளார்.மேலும் 9வது இடத்தில் பிரேசில் அதிபர் இனாசியோ லூலாடாசில்வா இடம் பிடித்துள்ளார். 10வது இடத்தில் இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா ஆர்சோ இந்த பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எந்த இடம்?
முக்கியமான விஷயம் என்னவென்றால் உலகில் அனைவராலும் அறியப்பட்டவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 39 சதவீத மக்கள் ஆதரவுடன் 13 வது இடத்திலும் பிரிட்டன் பிரதமர் ஸ்டார் கேமர் 24 வது இடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில் மிக குறைந்த அளவிலான மக்கள் ஆதரவு பெற்ற தலைவராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மைக்ரான் உள்ள இவர் சுமார் 17 சதவீத மக்கள் ஆதரவை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 75% அதிகமான மக்கள் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
