எங்களிடம் நல்ல பேட்டிங் வரிசை உள்ளது: ஷாய் ஹோப்

கொல்கத்தா,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இத்தாலியை வீழ்த்தி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 166 ரன் இலக்கை நோக்கி ஆடிய இத்தாலி, வெஸ்ட் இண்டீசின் வேகத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 18 ஓவர்களில் 123 ரன் னில் சுருண்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்க்கது.

வெற்றி தொடர்பாக பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் கூறுகையில்,

‘ஆடுகளம் ஓரளவு நன்றாக இருந்தது. நாங்கள் இன்னும் அதிகமான ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் பழக்கம் இல்லாத பவுலர்களை எதிர்கொள்ளும் போது நமது திட்டமிடல் கொஞ்சம் வித்தியா சமாகத் தான் இருக்கும். ஷமார் ஜோசப், மேத்யூ போர்டேவின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். 4-க்கு 4 என வெற்றி பெற்றுள்ள நாங்கள் அதே உத்வேகத்தை தொடர வேண்டும். எங்களிடம் நல்ல பேட்டிங் வரிசை உள்ளது. ஆனால் சாதுர்யமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்’ என்றார்.

Source link