எச்.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்த ரஜினிகாந்த்

சென்னை,

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்பின்போது அவரது உடல்நலம் குறித்து ரஜினி கேட்டு அறிந்தார்.

ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் , வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் எச்.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தனர்.

தனியார் செய்தி ஊடக தொலைக்காட்சிக்கான நேர்காணல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. அந்த நிகழ்வில் பேசிக்கொண்டிருந்தபோது எச்.ராஜா திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நலம் குறித்து கடந்த 31-ம் தேதி சென்னை அப்பல்லோ நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நலம் தேறி வருகிறது. அவர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். தனது உறவினர்கள், நண்பர்களுடன் பேசக் கூடிய நிலையில் அவர் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Source link