எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்க தலைவர் இல்லை – ஓ.பன்னீர்செல்வம்

தேனி,

தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்க அரசியல் தலைவர் இல்லை. 2017-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இருந்து, நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை 10 தேர்தல்களில் அவர் தோல்வியை தழுவியிருக்கிறார்.

Also Read
மக்களிடம் சென்று மகிழ்ச்சியோடு வாக்கு சேகரிக்க களத்திற்கு வந்துவிட்டோம் – எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்க தலைவர் இல்லை - ஓ.பன்னீர்செல்வம்

ஒரு சட்டமன்ற தேர்தலிலோ, நாடாளுமன்ற தேர்தலிலோ தோல்வியை சந்தித்தால், அடுத்து வரும் தேர்தலில் கட்சியை தூக்கி நிலைநிறுத்தி, வெற்றி பெற வைப்பவர்தான் ஆளுமை மிக்க தலைவர் என்பது தமிழக அரசியலில் உள்ள நிலைப்பாடு. அது எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. அவர் ஆளுமை மிக்க தலைவராக இல்லை என்ற காரணத்தினால், தொடர்ந்து 10 தேர்தல்களில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல்கள் என்று அனைத்து தேர்தல்களிலும் தோல்வியடைந்து படுதோல்வி பழனிசாமியாக இருக்கிறார்.

Also Read
பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை – போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடல் எரிக்கப்பட்டதால் பரபரப்பு
எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்க தலைவர் இல்லை - ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்யான அறிக்கை. கடந்த காலங்களில் பழனிசாமி சொன்ன எதையுமே நிறைவேற்றவில்லை. நான் திமுகவில் தொண்டனாகவே இணைந்திருக்கிறேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர் பட்டியல் வெளியிடும்போது, யாரெல்லாம் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனரோ அவர்கள் எல்லாரும் தகுதியானர்கள்.

தென் மாவட்டங்களில் 58 தொகுதிகளிலும் திமுக மாபெரும் வெற்றிபெறும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Also Read
காதலன் ஏமாற்றியதால் விரக்தி: கமிஷனர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு
எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்க தலைவர் இல்லை - ஓ.பன்னீர்செல்வம்

Source link