எடப்பாடி பழனிசாமி பிரசார வாகனத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை

தென்காசி,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, தேர்தல் ஆணையமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் கழுகுமலை அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மறித்து அதில் சோதனை நடத்தினர். சோதனையில் வாகனத்தில் எதுவும் சிக்காத நிலையில் தொடர்ந்து பிரசார பயணம் மேற்கொள்ள பறக்கும் படையினர் அனுமதி அளித்தனர்.

Source link