எடப்பாடி பழனிசாமி 50, 50 ஃபார்முலா… சென்னைக்கு கூட்டணி ஸ்கெட்ச்- சீட் ஷேரிங்கில் தாராளம்! – edappadi palaniswami 50 50 seat formula in chennai assembly constituencies 2026 election

அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய வியூகத்தை களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களுக்கு செல்வாக்கு மிகுந்த மாவட்டங்கள் பக்கம் கவனத்தை திருப்பி, தலைநகரில் தாராளம் காட்டப் போவதாக கூறப்படுகிறது.

Chennai Constituencies AIADMK 2026 Election Plan
Chennai Constituencies AIADMK 2026 Election Plan
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தங்களுக்கு செல்வாக்கிற்கு ஏற்ப ஒவ்வொரு மண்டலம் சாதகமாக இருக்கும். சில கட்சிகளுக்கு பரவலான வாக்கு வங்கி காணப்படும். இவை கூட்டணியாக சேரும் போது வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும். அப்படி அதிமுகவை எடுத்துக் கொண்டால் மேற்கு மற்றும் தென் மாவட்டங்கள் தொடர்ச்சியாக தேர்தல் வெற்றிகளை குவிக்க காரணமாக அமைந்திருக்கிறது. வடக்கு மற்றும் டெல்டா மண்டலங்களில் கூட்டணி கணக்குகள் அவ்வப்போது கைகொடுத்து வந்துள்ளன.

சென்னைக்கு ஈபிஎஸ் புதிய வியூகம்

இந்நிலையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்களின் செல்வாக்கு நிறைந்த தொகுதிகள் மற்றும் மாவட்டங்களில் கூடுதல் செலுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி பார்த்தால் வழக்கம் போல மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களை சொல்லலாம். இந்நிலையில் சென்னையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் என்ன வியூகம் என்ற கேள்வி எழலாம். இங்கு பாதிக்கும் குறைவாக கூட்டணி கட்சிகளுக்கு அளித்துவிடலாம் என்ற திட்டத்தில் இருக்கிறார்களாம்.

அன்புமணி அதிமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார், ராமதாஸ் சிக்னல் என்ன_ கூட்டணி யாருடன்_

சென்னையில் ஆர்.கே.நகர் தொகுதியில் நிச்சயம் அதிமுக போட்டியிடும். இதுவரை 7 முறை வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது திமுக எம்.எல்.ஏ இருந்தாலும் பட்டியலின மக்கள், மீனவர்கள், வன்னியர்கள் மத்தியிலான செல்வாக்கு இன்னும் தொடர்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வென்ற தொகுதி. இவர் மறையும் போது இந்த தொகுதி எம்.எல்.ஏவாக தான் இருந்தார். பெரம்பூர் தொகுதியை கடந்த தேர்தல் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு அதிமுக ஒதுக்கியிருந்தது. ஆனால் இம்முறை தவெக தலைவர் விஜய் போட்டியிட திட்டமிட்டிருக்கிறார்.

கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள்

எனவே கடைசி நேர கணக்குகள் மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து 3 முறை மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏவாக இருக்கிறார். இங்கு அதிமுகவே நேரடியாக களம் காண திட்டமிட்டு வருகிறது. வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றன. திரு.வி.க நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்த ஆலோசித்து வருகிறது. குறிப்பாக ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் 5 முறை எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார்.
கடந்த 2021 தேர்தலில் 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும், இம்முறை போட்டியிட தயாராகி வருகிறார். துறைமுகம் தொகுதியில் கடந்த முறை பாஜகவின் வினோஜ் பி.செல்வம் போட்டியிட்டார். இம்முறையும் அக்கட்சிக்கே ஒதுக்க வாய்ப்புள்ளது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியை பொறுத்தவரை கடந்த முறை போட்டியிட்ட பாமக, இம்முறை பின் வாங்க திட்டமிட்டுள்ளது. எனவே பாஜக சீட் கேட்டிருக்கிறது. ஆயிரம் விளக்கு தொகுதியும் பாஜகவிற்கு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு சீட்

அண்ணா நகர் தொகுதியில் 2021ல் கோகுல இந்திரா போட்டியிட்டார். இந்த முறை அதிமுகவா, பாஜகவா என ஆலோசனைகள் நடந்து வருகின்றன. விருகம்பாக்கம் தொகுதி அதிமுக, சைதாப்பேட்டை தொகுதி அமமுக செந்தமிழன், தி.நகர் தொகுதி பாஜக, மயிலாப்பூர் பாஜக, வேளச்சேரி பாஜகவின் எஸ்.ஜி.சூர்யா என ஒதுக்க வாய்ப்புள்ளது. சென்னையை ஒட்டியுள்ள தொகுதிகளில் ஆலந்தூர் அதிமுக கூட்டணியில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி ராஜேஸ்வரி பிரியா, மதுரவாயல் அமமுக அல்லது பாமக என களம் காணவுள்ளனர்.