மும்பை,
முன்னாள் உலக அழகியும் நடிகையுமான மனுஷி சில்லர், உடல் எடை என்பது உடல் ஆரோக்கியத்தின் ஒரே அளவுகோல் அல்ல என்று தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிய போது, “நான் இப்போது முன்பைவிட அதிக எடையுடன் இருக்கிறேன். அதேபோல் அதிக பலமாகவும் இருக்கிறேன்” என்று கூறினார்.
தன்னை முழுமையாக காலை நேரம் விரும்பும் நபர் என கூறிய அவர், வேலை காரணமாக இரவு நேர வாழ்க்கைக்கு பழக வேண்டி வந்ததாக தெரிவித்தார்.
உடற்பயிற்சி குறித்து பேசும்போது, 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்திற்காக குத்துச்சண்டை மற்றும் மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி பெற்றதாகவும், அது தற்போது தன் விருப்பமான உடற்பயிற்சிகளில் ஒன்றாக மாறியுள்ளதாகவும் மனுஷி தெரிவித்தார்.
