சென்னை,
சமீபத்திய நேர்காணலில் மலையாள நடிகை மீரா வாசுதேவன் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
“நான் தவறுகள் செய்துள்ளேன், என்னிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. இப்போது நான் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக வலைதளங்கள் மூலம் விவாகரத்து அறிவித்தது குறித்து பேசும்போது, “தவறான தகவல்கள் பரவாமல் இருக்கவும், எந்த விதமான புரிதல் இன்மையும் ஏற்படாதிருக்கவும் தான் நான் சமூக வலைதளங்கள் மூலம் விவாகரத்தை அறிவித்தேன்,” என்று கூறினார்.
இவை நடக்கும் என்பதை என்பதை முன்பே ஏற்றுக்கொண்டதாகவும், அதனை சமாளித்து வாழ்க்கையை முன்னேற்றிக் கொண்டு செல்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது தனது பட பணிகளில் மிகவும் பிஸியாக இருப்பதுடன், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மீரா வாசுதேவன் கூறியுள்ளார்.
உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு, ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன், மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக தன்மந்த்ரா படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
2005-ல் பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2010-ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அந்த திருமணமும் நீடிக்காமல் அவரையும் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அரிஹரா என்ற மகன் உள்ளார்.
பின்னர் 2024 மே மாதத்தில் ஒளிப்பதிவாளர் விபின் புத்யங்கத்துடன் திருமணம் செய்துகொண்ட அவர், 2025 ஆகஸ்டில் அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்றார்.
