என் தாய் நாட்டை சொர்க்கமாக மாற்றுவேன் – திருத்தணியில் சீமான் பேச்சு! – 2026 election ntk seeman says he will turn tamilnadu into heaven

அனைத்து தேர்தல் கட்சிகளும் ஏப்ரல் 23ஆம் தேதிக்காக கடுமையாக உழைத்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமான ஒரு வரலாற்று தேர்தலாக கவனம் பெற்று இருக்கிறது.நான்கு முனை போட்டி என்ற சூழல் நிலவுவதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் வேலைகளில் இறங்கி வருகின்றன.

அதன் அடிப்படையில் தான் நாம் தமிழர் கட்சியும் தேர்தல் வேலைகளை முடிக்கிவிட்டிருக்கிறது. கட்சி தொடங்கிய 15 ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி வைக்காமலே தேர்தலை சந்தித்துள்ளது அதன் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 8 சதவீத வாக்குகளுடன் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது.

திருத்தணியில் முதல் கட்ட பிரச்சாரம்

தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து நகரும் நாம் தமிழர் கட்சியின் முதல் கட்டு பரப்புரை துவங்கியிருக்கிறது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருத்தணியில் தனது முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். இன்றைய தினம் கையில் வேலுடன் திருத்தணி மலை ஏறிய சீமான் வழிபாடு முடிந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில் “என் தாய் நாட்டை சொர்க்க பூமியாக மாற்றுவேன் எனவும் நாம் தமிழர் நிச்சயம் வெற்றி பெறவும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார், மேலும் அவர் பேசுகையில் இது நீண்ட காலப்போர் என்பதால் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Source link