எம்.பி சீட் தருவதாக கூறி ஏமாற்றிய ஈபிஎஸ்… ஒரிஜினல் ஒப்பந்தத்தை காட்டிய பிரேமலதா விஜயகாந்த்! – premalatha vijaykanth released eps signed rajya sabha seat in tiruvannamalai campaign

2024ஆம் ஆண்டு தங்கள் கட்சிக்கு ஒரு எம்.பி சீட் தருவதாக எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு வழங்கிய ஒப்பந்தத்தை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டிருக்கிறார். இது தமிழக தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Premalatha Vijayakanth DMDK EPS signed Rajya Sabha Document(புகைப்படங்கள்Samayam Tamil)
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சார களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என நான்கு முனைப் போட்டியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு மும்முரம் அடைந்துள்ளது. குறிப்பாக திமுக கூட்டணியில் முதல்முறை இடம்பெற்றுள்ள தேமுதிக மீது அதிமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இதனால் கோபமடைந்த பிரேமலதா விஜயகாந்த், சற்றுமுன் அதிரடியான ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். அதாவது, திருவண்ணாமலை கோயிலில் வைத்து எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு வழங்கிய ஒப்பந்தத்தை செய்தியாளர்கள் முன்பு காண்பித்தார். இது தமிழக அரசியல் களத்தில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது.