எரிபொருள் நெருக்கடி: இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை

கொழும்பு,

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் உள்ளிட்ட இடங்களிலும், இஸ்ரேல் மீதும் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.

இதனால் மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது. 17-வது நாளாக போர் நீடித்து வருகிறது.

இந்தநிலையில் போர் பதற்றத்தால் ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை முடக்கியது. இதனால் அதன் வழியாக கச்சா எண்ணெய் கொண்டும் செல்லும் பல நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன.

அந்தவகையில், இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மாற்று தீர்வாக வாரத்தில் நான்கு நாள் வேலை முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்தது.

இதற்கான ஆலோசனை கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்தநிலையில்,எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க எதிர்வரும் அனைத்து புதன்கிழமையும் பொதுவிடுமுறையாக அறிவித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

அத்தியாவசிய துறைகள் தவிர்த்து பிற அனைத்து துறைகளுக்கும் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்கும் என்றும், பள்ளி, கல்லூரிகளுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link