எரிவாயு விநியோகம் குறைப்பு: கெயில் நிறுவனம்

புதுடெல்லி,

ஈரான் – இஸ்ரேல் போரால் இந்தியாவில் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிப்பு என கெயில் நிறுவனம் அறிவித்துள்ளது. போர் காரணமாக இந்தியாவின் எரிசக்தி துறை நெருக்கடியை சந்தித்து வருவதாக கெயில் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கான விநியோகத்தை குறைக்கப்போவதாகவும் எரிவாயு நிறுவனமான கெயில் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோநெட் எல்.என்.ஜி. நிறுவனத்திடம் இருந்து கெயில் பெற்று வந்த எரிவாயு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்களுக்கு 40 சதவீதம் வரை விநியோகம் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மொத்த எல்.என்.ஜி தேவையில் 40 சதவீதத்தை கத்தார் பூர்த்தி செய்கிறது. தற்போது அங்குள்ள ராஸ் லாபான் வளாகத்தில் எல்.என்.ஜி. உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது, மற்றும் ஹார்மூஸ் நீரினை மூடப்பட்டுள்ளதால் தடைப்பட்டுள்ள போக்குவரத்து ஆகியவற்றால் இந்தியாவுக்கு எல்.என்.ஜி. வினியோகம் முடங்கி உள்ளது.

Source link