எலும்பு இல்லாத நாக்கு எப்படியும் பேசும்: ஓபிஎஸ் மீது செல்லூர் ராஜு கடும் தாக்கு

சென்னை,

சென்னை ராயப்பேட்டை தலைமை கழகத்தில் அதிமுக பிரசார குழு ஆலோசனை கூட்டம் தம்பிதுரை எம்.பி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தேர்தல் களம் அதிமுகவுக்கு சாதகமாகவே உள்ளது. திமுக ஆட்சி இனியும் தொடர்ந்தால் எங்களுக்கு பாதுகாப்பு இருக்காது என மக்கள் உணர்ந்துள்ளார்கள். திமுக எவ்வளவு காசு கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். ஓபன்னீர் செல்வம் கூட்டங்களுக்கு காசு கொடுத்தாலும் கூட்டம் வரவில்லை.

அவரை போன்று மோசமான ஆளை பார்க்கமுடியாது என மக்கள் சொல்கிறார்கள். ஓ.பன்னீர் செல்வம் மீது எங்களுக்கு தனி மரியாதை உண்டு தென் மாவட்டக்காரர். அவருடைய நடவடிக்கையால் மக்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி உள்ளார். ஒரு டீக்கடைக்காரரை 3 முறை முதல்-அமைச்சராக்கிய, பல துறைக்கு அமைச்சராக்கிய இயக்கம் அதிமுக.

எலும்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் என்பதற்கு ஓ.பன்னீர் செல்வம் ஒரு உதாரணம். அதிமுக கூட்டங்களில் ஸ்டாலின் குறித்து ஓ.பன்னீர் செல்வம் பேசாத பேச்சா? அம்மா இல்லை என்றதும் அப்படியே மாறி விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link