எல்லை மீறிய டிரோல் – சைபர் கிரைமில் புகாரளித்த நடிகை

ஐதராபாத்,

பிரபல நடிகை ரேணு தேசாய், சமூக வலைதளங்களில் தகாத வார்த்தைகளால் தன் மீது அவதூறு பரப்புவோருக்கு எதிராக சைபர் கிரைம் பொலீசில் புகார் அளித்துள்ளார்.

தன்னை குறிவைத்து அவதூறு பதிவுகள் வெளியிட்டு வந்த நான்கு சமூக வலைதள கணக்குகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக தன்னை குறிவைத்து தகாத வார்த்தைகளால் சிலர் அவதூறு பரப்பி வருவதாகவும், அது தனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

Also Read
மாதம்பட்டி ரங்கராஜுக்கு டி.என்.ஏ. பரிசோதனை
எல்லை மீறிய டிரோல் - சைபர் கிரைமில் புகாரளித்த நடிகை

பெண்கள், குழந்தைகள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து பகிர்ந்து வரும் ரேணு தேசாய், அண்மையில் தெருநாய்கள் தாக்குதல் சம்பவங்கள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த கருத்துகளை சிலர் திரித்து பரப்பியதாகவும், அதனால் தன் மீது விமர்சனங்கள் அதிகரித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், அவதூறு மற்றும் தகாத பதிவுகள் வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் சைபர் கிரைம் போலீசை அணுகியுள்ளார்.

Source link