எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயக்கம்

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று முதல் மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தன. இதன் காரணமாக, 10 மற்றும் 11-வது நடைமேடை களில் இருந்து இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள், கடந்த பிப் ரவரி மாதம் 20-ந் தேதி முதல் 5 மற்றும் 6-வது நடைமேடைக ளுக்கு மாற்றப்பட்டன. மேலும், பராமரிப்பு பணி நிமித்தமாக மின்சார ரெயில் சேவைகள் கணிசமாக குறைக்கப்பட்டன. இதனால் வேலைக்குச் செல்லும் பணியாளர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில், எழும்பூர் ரெயில் நிலையத்தில் திட்டமிடப்பட்டிருந்த முக்கிய பராமரிப்பு பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்தன. இதையடுத்து, நேற்று அதிகாலை முதலே சென்னையில் மின்சார ரெயில்கள் பழைய அட்டவணைப்படி வழக்கம்போல் இயங்கத் தொடங்கின.

அதன்படி, சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மற்றும் அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட அனைத்து வழித்தடங்களிலும் மின்சார ரெயில்கள் தடையின்றி இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர்.

Source link