எஸ்.பி.பி. சிலை திறப்பு விழா: ரஜினிகாந்துக்கு விஜய் யேசுதாஸ் அழைப்பு

சென்னை,

மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விஜய் யேசுதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

சிலை திறப்பு விழாவைத் தொடர்ந்து நடைபெறவுள்ள “சமம் சங்கீத மேகம்” எனப்படும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்குமாறு ரஜினிகாந்திடம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சி இசை உலக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read
ஒரே ‘ஸ்டெப்’ போட்டு போட்டு எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது – சம்யுக்தா விஸ்வநாதன்
எஸ்.பி.பி. சிலை திறப்பு விழா: ரஜினிகாந்துக்கு விஜய் யேசுதாஸ் அழைப்பு

கேரள மாநிலம், பாலக்காடு வி.டி. பட்டதிரிபாட் நினைவிடத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி இந்தச் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.

ஏற்கனவே ஐதராபாத்திலும் எஸ்பிபி-க்கு சிலை திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாலக்காட்டில் அமையுள்ள சிலை திறப்பு விழாவிற்கு ரஜினிகாந்த் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link