ஏப்ரல் மாத ராசிபலன் – மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே!

பெரும்பாலும் மற்றவரிடம் இனிமையாகவும் நாகரிகமாகவும் பேசி பழகுபவர்கள் நீங்கள் என்பதால் உங்களிடம் மனம் விட்டு பேசக் கூடிய உங்கள் நலம் விரும்பிகள் உங்களைச் சுற்றி நிறையவே இருப்பார்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்கள்:

அலுவலகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உத்யோகத்தில் பெரும் பிரச்சினைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் கடின உழைப்புத் தேவைப்படும்.

வியாபாரிகள்:-

இரும்பு வியாபாரிகள் தாங்கள் அதிக முதல் போடுவதை தவிர்ப்பது நல்லது. பொருட்கள் விற்ற பின் தொழிலில் முதல் போடுவது நஷ்டத்தை தவிர்க்க இயலும்.

குடும்பத் தலைவிகள்:-

வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர், விருந்தினர் வருகை ஏற்பட்டு செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும் தங்கள் சிக்கன நடவடிக்கைகளால் தங்கள் கணவனின் மனதில் நீங்கா இடம் பெறுவீர்கள்.

கலைஞர்கள்:-

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது முழுமையாக கவனமாகப் படித்துவிட்டு கையெழுத்திடுவது நல்லது.

மாணவர்கள்:-

சக மாணவர்களுடன் வம்பு, வழக்குகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் நட்புணர்வுடன் பழகி வர முயலுவது உங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள உதவும்.

பரிகாரம்:-

சனி பகவானுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது எள் சாதம் செய்து சாமிக்கு படைத்து கோவிலில் உள்ள வயதானவர்களுக்கு கொடுத்து வருவதால் உங்கள் குடும்பத்தில் தடைப்பட்டிருந்த காரியங்கள் யாவும் நிச்சயம் நடைபெற வாய்ப்புண்டு.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே!

உள்ளதை உள்ளபடி சொல்பவர். நடிக்கத் தெரியாதவர். நல்ல பண்பாளர்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகதர்கள்:

உத்யோகதர்களுக்கு அடிக்கடி தங்களுக்கு அலுவலக வேலை நிமித்தமாக வெளியூர்களுக்குச் செல்ல உத்தரவு வரும். கவலை வேண்டாம் அவ்வாறு செல்வதன் மூலம் தங்களுக்கு பெரிய மனிதர்களின் தொடர்பும் அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

வியாபாரிகள்:

வியாபாரிகள் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். ஏனென்றால், பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டியது வரும். எனவே, கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

குடும்பத் தலைவிகள்:

கைத்தொழிலான டைலரிங், அழகு நிலையங்கள்,பொம்மை தொழில் போன்ற சுயதொழிலை ஆரம்பித்து லாபத்தை ஈட்டுவீர்கள். மாமியார் மருமகள் உறவுகளில் பிரச்சினை ஏற்படும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.

கலைஞர்கள்:

கலைஞர்கள் தங்கள் உழைப்பினை போட்டால் தாங்கள் அதற்கேற்ற பலன் தாமதமானாலும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லாமல் செயல்படவும் வெற்றி உங்கள் பக்கம்தான்.

மாணவர்கள்:

கல்லூரி மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களது சகமாணவர்களுடன் சுற்றுலா செல்லும் போது படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டுகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

பரிகாரம்:

ராகு பகவானுக்கு ராகு காலத்தில் வெள்ளிக் கிழமை அன்று பால் முட்டை போடுவது நல்லது.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே!

மற்றவர்களை சார்ந்து வாழ விரும்பாதவர்கள் நீங்கள். தன்னால் மற்றவர்களுக்கு உதவி புரிவீர்களே தவிர பிறரை நம்பி வாழ விரும்பாதவர்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகதர்கள்:

உத்யோகதர்களுக்கு தங்கள் அலுவலகத்தில் மதிப்பும் பாராட்டும் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவுவர். ஒரு சிலருக்கு இடமாற்றம் அமையும்.

வியாபாரிகள்:

வியாபாரிகள் தங்கள் உற்பத்தியை கூட்டுவது நல்லது. அதிக விற்பனை உண்டாகும். வாடிக்கையாளர்கள் பெருகுவர். பல கிளைகள் துவங்குவர்.

குடும்பத் தலைவிகள்:

உடல் நிலையில் அக்கறைக் கொள்வது நல்லது. பிள்ளைகள் தங்கள் பெயரை காப்பாற்றுவர். பெண்கள் தங்க ஆபரணங்கள் வாங்குவர். சேமிப்பினை உயர்த்துவர்.

கலைஞர்கள்:

கலைஞர்கள் வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும்.

மாணவர்கள்:

மாணவர்கள் மூத்த மாணவர்களிடம் இருந்து சில முக்கிய பதில்களைக் கற்றுக் கொள்வீர்கள். வகுப்பறையில் வீண் அரட்டையை தவிருங்கள். விளையாட்டுப் போட்டியில் பரிசு பெறுவீர்கள்.

பரிகாரம்:

சுக்கிர பகவானுக்கு வெள்ளிக் கிழமை அன்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

கடகம்

கடக ராசி அன்பர்களே!

இரு மனம் கொண்டவர்கள் நீங்கள். முடிவெடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகதர்கள்:

சக ஊழியர்களில் சிலர் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் உங்கள் உயர் அதிகாரிகளின் பேரன்பையும் மதிப்பையும் பெறுவீர்கள். மேலதிகாரிகள் உங்கள் பக்கம் இருந்து அனைத்துவிதத்திலும் தங்களுக்கு உதவியாக இருப்பார்,

வியாபாரிகள்:

கல், மண் மற்றும் இரும்பு வியாபாரிகள் தாங்கள் அதிகமான விற்பனைகளை செய்து நல்ல பணவரவு கிடைக்கும். ஒரு சிலர் பெரிய வீடு என கட்டத்துவங்குவீர்கள்.

குடும்பத் தலைவிகள்:

கணவரின் அன்பைப் பரிபூரணமாகப் பெற்று மனமகிழ்வு கொள்வீர்கள். வீட்டினை கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்வீர்கள்.

கலைஞர்கள்:

புதுமுகக் கலைஞர்களுக்கு தங்களது திறமையினை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவைப் பெறுவீர்கள். சோர்வு வேண்டாம்.

மாணவர்கள்:

தாங்கள் தங்களின் வகுப்பு மாணவர்களுடன் கைகலப்பு உண்டாக்காமல் அதாவது வம்பு, வழக்குகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் நட்புணர்வுடன் பழகி வர முயலுவது தங்களது அது உங்கள் பெற்றோரின் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள உதவும்.

பரிகாரம்:

மஹா லட்சுமி தாயாருக்கு மாலை வேளையில் நெய்விளக்கு ஏற்றவும்.

Source link