ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள “கோச்சடையான்”

2014-ம் ஆண்டில் கோச்சடையான் என்ற படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். இதில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, நாகேஷ், சரத்குமார், ஆதி, நாசர் உள்ளிட்டோரை அனிமேஷன் தொழில்நுட்பத்தில் படத்தில் இடம் பெற செய்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் கூட, ‘கோச்சடையான்’ படத்தை புதிய தோற்றத்தில் தீபிகா பொம்மை படம் என்றெல்லாம் ரசிகர்கள் விமர்சித்தார்கள் என சவுந்தர்யா ஒரு பேட்டியில் வருத்தம் தெரிவித்திருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இதற்கிடையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் ‘கோச்சடையான்’ படம் மெருகேற்றப்பட்டு இருக்கிறது. இதன் டீசரும் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் ரஜினியின் தோற்றம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. படத்தின் ரீ-ரிலீஸ் தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link