ஏ.டி.எம். சேவையை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால்… அதிர்ச்சி கொடுத்த இந்தியன் வங்கி

சென்னை,

இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணுக்கு நேற்று குறுஞ்செய்தியை அனுப்பியது. அதில், அன்பான வாடிக்கையாளர்களே, மாதம் 5 முறை ஏ.டி.எம்.ல் பண பரிவர்த்தனையை கட்டணம் இல்லாமல் மேற்கொள்ளலாம்.

அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.17 கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தியன் வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link