ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை – கோவா அணிகள் இன்று மோதல்

சென்னை,

12-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங் களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 14 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.

இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட் டங்கள் அரங்கேறுகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவாவை எதிர்கொள்கிறது. இந்த சீசனில் சென்னை அணி சொந்த ஊரில் ஆடும் முதல் ஆட்டம் இதுவாகும்.

Source link